ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக புணே வாரியர்ஸ் அணி அறிவித்துள்ளது.
அணியின் வங்கி உத்தரவாதத் தொகையை பிசிசிஐ பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், சஹாரா குழுமத்துக்கு சொந்தமான புணே வாரியர்ஸ் அணி ஐபிஎல்-லில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2010-ல் ரூ.1700 கோடிக்கு புணே வாரியர்ஸ் அணியை சஹாரா குழுமம் வாங்கியிருந்தது. பிசிசிஐயின் செயல்பாட்டால்தான் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும், அணிக்கான தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்தாலும் மீண்டும் சேரப்போவதில்லை. இதுவே இறுதியான முடிவு; இதில் மாற்றம் இல்லை என சஹாரா குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பலமுறை நினைவூட்டியும் அணிக்கான தொகையை குறைக்க பிசிசிஐ முன்வரவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு 94 போட்டிகளின் அடிப்படையில் கிடைக்கும் வருவாயைக் கருத்தில் கொண்டு ரூ.1700 கோடி செலுத்தி புணே வாரியர்ஸ் அணி வாங்கப்பட்டது.
ஆனால் எங்கள் அணிக்கு வெறும் 64 போட்டிகளே கிடைத்தன. ஏலத்தொகையை குறைக்குமாறு நாங்களும், கொச்சி அணியும் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்தோம். ஆனால் பிசிசிஐ அதைப் பொருள்படுத்தவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்பிரச்னை தொடர்பாக மத்தியஸ்தத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரி வருகிறோம். ஆனால் பணத்தையே பிசிசிஐ பெரிதாக எண்ணுகிறது.
இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே விலகுவதாக நாங்கள் அறிவித்திருந்தோம். இந்திய தேசிய அணியை ஸ்பான்சர் செய்வதில் இருந்தும் விலகி விடலாம் என நாங்கள் கருதினோம். ஆனால் வீரர்களின் நலனைக் கருதி அவ்வாறு செய்யவில்லை. நாட்டுக்காக விளையாடி வரும் வீரர்களுக்கு தீங்கை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
ஐபிஎல் அணிக்கான புதிய ஸ்பான்சரை பெறுவதற்காக நாங்கள் 2014-ம் ஆண்டு ஜனவரி வரை பிசிசிஐக்கு அவகாசம் அளித்துள்ளோம். இந்திய அணிக்கு அளித்துவரும் ஸ்பான்சர், ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் மாதம் வரை தொடர்வோம் என சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: புணே வாரியர்ஸ் அணி விலகி விட்டது. விதிகளின்படிதான் வங்கி உத்தரவாதத் தொகையை பணமாக்கினோம். பிசிசிஐ விதிகளின்படி அணிக்கான தொகையை செலுத்தத் தவறினால் அவர்களின் வங்கி உத்தரவாதத்தை பணமாக்கலாம். புணே வாரியர்ஸ் அணி வெளியேறியது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.
அப்போது, சஹாரா குழுமம் விலகியதால், இந்திய அணிக்கான ஸ்பான்சரும் பாதிக்கப்படுமா எனக் கேட்டதற்கு, "இதுதொடர்பாக எந்த தகவலும் இல்லை. புணே வாரியர்ஸ் அணி விலகியதால் அந்த வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள், அடுத்த ஐபிஎல் போட்டிக்கான திறந்த ஏல முறையில் கலந்து கொள்ளலாம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


