நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

செரீனா "அவுட்'

உலகின் நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸத் தோற்கடித்து

Updated On :2 ஜூலை 2013, 6:03 am IST

உலகின் நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸத் தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஜெர்மனி வீராங்கனை சபைன் லிசிக்கி.

லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செரீனாவுடன் போட்டித் தரவரிசையில் 23-ம் இடத்தில் உள்ள லிசிக்கி பலப்பரீட்சை நடத்தினார். நடப்புச் சாம்பியனான செரீனா இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறுவார் என்று அனைவரும் கருதினர். ஆனால், செரீனாவுக்கு கடும் சவால் அளித்தார் லிசிக்கி. அதனால் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை லிசிக்கி தன் வசமாக்கினார்.

எனினும் அடுத்த செட்டில் செரீனா ஆக்ரோஷமாக விளையாடி, 6-1 என்று புள்ளிக் கணக்கில் வென்றார். இதனால் ஆட்டம் 3-வது செட்டுக்குச் சென்றது. இதில் இரு வீராங்கனைகளும் கடுமையாகப் போராடினர். இறுதியில் லிசிக்கி 6-4 என்ற கணக்கில் செரீனாவை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த தோல்வியின் மூலம் நடப்புச் சாம்பியனான செரீனா விம்பிள்டன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

காலிறுதியில் லி நா: 4-வது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் சீனாவின் லி நாவும், இத்தாலியின் வின்சியும் மோதினர். இந்த ஆட்டம் முழுவதும் லி நா வசமானது. அவர் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதற்கு முன்னர், 2006 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் லி நா விம்பிள்டன் போட்டியின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விம்பிள்டனில் அவர் ஒருமுறைகூட அரையிறுதிக்கு முன்னேறவில்லை.

இப்போட்டியில் ஷரபோவா, அஸரென்கா, இவானோவிச்  உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் ஏற்கெனவே வெளியேறி விட்டனர். தற்போது செரீனாவும் தோற்றுள்ளதால், மகளிர் பிரிவில் சீனாவின் லி நாவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு நல்கி வந்துள்ளது. இவர், 2011-ம் ஆண்டில் பிரான்ஸ் ஓபன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டனின் லாரா ராப்சன் தோல்வியைத் தழுவினார். அவர் 6-7, 5-7 என்ற நேர் செட்களில் இஸ்டோனியாவின் கனிபியிடம் தோல்வியுற்றார்.

செக் குடியரசின் பெட்ரோ குவிட்டோவா 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் நவர்ரோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். குவிட்டோவாவும் கோப்பையை வெல்லக்கூடிய வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ஃபெரர் வெற்றி: இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். திங்கள்கிழமை நடைபெற்ற 4-வது சுற்றில் ஃபெரர் 6-7, 7-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவான் டோடிச்சை வீழ்த்தினார். இப்போட்டியில் காலிறுதியை அடைந்ததன் மூலம் தொடர்ச்சியாக 7 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறிவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

போலந்தின் ஜான்கோவிச் 3-6, 7-6, 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஜர்ஜீ மெல்ஸரை தோற்கடித்தார். அதேபோல், போலந்தின் கியூபெல் 4-6, 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் மன்னரினோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் போபண்ணா ஜோடி

ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா- பிரான்ஸின் வேஸ்ஸலின் ஜோடி 6-4, 4-6, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் பெயே, பிரிட்டனின் சோரெஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.