இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 92 ஓவர்களில் 238 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாளான சனிக்கிழமை 74.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ரோஜர்ஸ் 101, பிராட் ஹாடின் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஹாடின் 13, ரோஜர்ஸ் 110 ரன்களில் ஆட்டமிழக்க, 270 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து 64 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது. இயான் பெல் 84, ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ரியான் ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இங்கிலாந்து 173 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


