உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனான் தங்கம் வென்றார்.
இதன்மூலம் இப்போட்டியில் தங்கம் வென்ற தாய்லாந்தின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரட்சனோக்.
சீனாவின் குவாங்ஜெü நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரட்சனோக் 22-20, 18-21, 21-14 என்ற நேர் செட் கணக்கில் உலகின் முதல்நிலை வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான சீனாவின் லீ ஸியூரூயை வீழ்த்தினார். விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 12-19 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த ரட்சனோக், அடுத்த 11 கேம்களில் 10-ஐ வென்று அந்த செட்டை 22-20 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன்பிறகு 2-வது செட்டை 18-21 என்ற கணக்கில் இழந்த ரட்சனோக், அடுத்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி லீ ஸியூரூயை வீழ்த்தினார். வெற்றி குறித்துப் பேசிய ரட்சனோக், "இந்த வெற்றியை எனது நாட்டு ராணி சிரிகித் மற்றும் எனது தாயிடம் கொண்டு செல்லப்போகிறேன்' என்றார். ரட்சனோக், திங்கள்கிழமை (ஆக.12) தாய்லாந்து ராணியை சந்திக்கிறார்.
5-வது முறையாக லின் டான்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லின் டான் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் லின் டானும், முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்யும் மோதினர். இதில் லின் டான் 16-21, 21-13, 20-17 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, லீ சாங்குக்கு காலில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைப் பின்னரும் அவருக்கு வலி குறையாததால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து லின் டான் சாம்பியன் ஆனார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தோனேசியாவின் முகமது அசன்-ஹேந்த்ரா சேதிவான் ஜோடி 21-13, 23-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் மத்தியாஸ் போயி-கார்ஸ்டென் மோகென்ஸன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
மகளிர் இரட்டையர் பிரிவில் சீனாவின் வாங் ஸியோலி-யூ யாங் ஜோடி 21-14, 18-21, 21-8 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஹை வோன்-ஜாங் இ ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது.
"சாய்னாவின் சவாலை சந்திக்கத் தயார்'
இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் சாய்னாவின் சவாலை சந்திக்கத் தயார் என்று பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
உலக பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற சிந்து, மேலும் கூறியிருப்பது:
வெண்கலம் வென்றது "த்ரில்'லாக உள்ளது. இந்திய பாட்மிண்டனில் சிறப்பாக செயல்படுவதுதான் எனது அடுத்த இலக்கு. சாய்னாவுக்கு எதிராக விளையாடவும், எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் தயார். இந்திய பாட்மிண்டன் போட்டி சிறப்பான போட்டியாக இருக்கும் என நம்புகிறேன். அதில் உலகின் முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராக விளையாட ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் என்றார்.
இந்திய பாட்மிண்டன் லீக்கில் சாய்னா, ஹைதராபாத் அணியிலும், சிந்து, லக்னௌ அணியிலும் இடம்பெற்றுள்ளனர். 6 அணிகள் பங்கேற்கவுள்ள இந்திய பாட்மிண்டன் லீக், வரும் 14-ம் தேதி தில்லியில் தொடங்குகிறது. 18 நாள்கள் நடைபெறும் இப்போட்டி ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகிறது. மொத்தம் 90 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சிந்துவுக்கு ரூ.15 லட்சம் "பாய்' அறிவிப்பு
உலக பாட்மிண்டனில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சீனாவில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் போட்டியில் சிறப்பாக விளையாடி வெண்கலம் வென்ற சிந்துவின் முயற்சியை எப்படி பாராட்டினாலும் தகும்.
அவருடைய சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் "பாய்' சார்பில் அவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதிப்பவர்கள் கெüரவிக்கப்படுவதோடு, அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பதை பாட்மிண்டன் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் "பாய்' தெரிவித்துக் கொள்கிறது.
அதற்காகத்தான் தற்போது இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சர்வதேசப் போட்டிகளில் ஏராளமான இந்தியர்கள் பதக்கம் வெல்வதைக் காண முடியும் என உறுதியாக நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிதேந்திர சிங் வாழ்த்து
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் குவாங்ஜெü நகரில் உலக பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
இதையடுத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜிதேந்திர சிங், மேலும் கூறியிருப்பதாவது: உலக பாட்மிண்டன் போட்டியில் சிறப்பாக விளையாடி சாதித்த உங்களுக்கு எனது வாழ்த்துகள். அந்தப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்று பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் உங்களுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுராக பௌர்ணமி ஆஷா போஸ்லே!

”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

