தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஹைதராபாத் அணி சாம்பியன்

முதலாவது இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் சாய்னா நெவால் தலைமையிலான ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 2:13 am

முதலாவது இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் சாய்னா நெவால் தலைமையிலான ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் சிந்துவின் அவாத் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தியாவில் கிரிக்கெட் லீக் போட்டி மிகவும் பிரபலமடைந்தது, இதையொட்டி, அதே வடிவில் பாட்மிண்டன் போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முதலாவது பாட்மிண்டன் லீக் போட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளின் முடிவில் ஹைதராபாத் அணியும், லக்னெü அணியும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.

அவாத் வாரியர்ஸýக்கு சிந்து கேப்டனாகச் செயல்பட்டார். இந்தப் போட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியின் முதல் ஆட்டமான ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவாத் வாரியர்ஸ் அணியின் ஸ்ரீகாந்த் 21-12, 21-20 என்ற நேர் செட்களில் ஹைதராபாதின் தனோங்சக்கை வீழ்த்தினார். இதனால் லக்னெü அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.

சாய்னா-சிந்து: மகளிர் ஒற்றையப் பிரிவில் இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ஹைதராபாதின் சாய்னாவும், லக்னெüவின் சிந்துவும் மோதினர். லீக் ஆட்டத்தின் சாய்னாவிடம் பெற்ற தோல்விக்கு சிந்து தக்க பதிலடி தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சாய்னாவின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு சிந்துவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில் 21-15, 21-7 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார். இதனால் 1-1 என்று புள்ளிகள் கணக்கு சமநிலையை எட்டியது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹைதராபாதின் கோ வி ஷெம்- வா லிம் கிம் ஜோடி 21-14, 13-21, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் சாய்னா அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.

பரபரப்பான ஆட்டம்: 3 ஆட்டங்களில் ஹைதராபாத் முன்னிலை பெற்றதால், 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பரபரப்பு அதிகம் காணப்பட்டது.

இதில், ஹைதராபாதின் அஜய் ஜெய்ராமும், லக்னெüவின் குரு சாய் தத்தும் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 10-21 என்ற கணக்கில் குரு சாய் தத்தும், 2-வது செட்டை 21-17 என்ற கணக்கில் ஜெய்ராமும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஜெய்ராம் 11-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனால் ஹைதராபாத் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பாட்மிண்டன் லீக் கோப்பையை கைப்பற்றியது.

தொடர் நாயகி சாய்னா!

இந்த லீக் போட்டியில் தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சாய்னா வெற்றி பெற்றார். இதனால் அவர், தொடர் நாயகி விருதைப் பெற்றார். கோப்பையைக் கைப்பற்றியது குறித்து அவர் கூறுகையில், "இத்தொடர் முழுவதும் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிர்ஷ்டவசமாக இத்தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றேன். சிந்துவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதலாவது பாட்மிண்டன் லீக் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரீமியர் லீக் போட்டியைப் போல, விரைவில் பாட்மிண்டன் லீக் போட்டியும் ஜொலிக்கும்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.