தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அகில இந்திய ஹாக்கி: ராஜா அதிரடி; இந்தியன் வங்கி அபார வெற்றி

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் 2-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி 5-0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் போலீஸ் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் ராஜா 4 கோல்களை அடித்தார்.

Updated On :18 மே 2013, 7:13 pm

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் 2-வது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் வங்கி 5-0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் போலீஸ் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் ராஜா 4 கோல்களை அடித்தார்.

கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.ஆர்.மருத்துவ அறக்கட்டளை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 5-வது அகில இந்திய ஹாக்கி போட்டி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி அணி வெற்றி: இதில், முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு ஹாக்கி அணி-ஆந்திர ஆர்.டி.டி. ஹாக்கி அகாதெமி அணி இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது கோவில்பட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அந்த ஆட்டம் 2-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து நடைபெற்றது. அதில், கோவில்பட்டி அணி வீரர் செட்ரிக் இரு கோல்களை அடித்தார். இதன்பிறகு ஆந்திர அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. அந்த அணியின் அக்ரம்பாஷா இந்த கோலை அடித்தார். இறுதியில் கோவில்பட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பெங்களூர் கனரா வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை நகர காவல் அணியை வீழ்த்தியது.

இந்தியன் வங்கி வெற்றி: 3-வது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், ஜார்க்கண்ட் போலீஸ் அணியும் மோதின. இதில் இந்தியன் வங்கி ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடியது. அதனால் ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் கோலடித்த இந்தியன் வங்கி வீரர் ராஜா, 8-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.

இதைத்தொடர்ந்து 9-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்தது இந்தியன் வங்கி. இந்த கோலை பிலிப்மார்டீன் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் இந்தியன் வங்கி அணியே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் ராஜா மீண்டும் இரு கோல்களை (61 மற்றும் 69-வது நிமிடம்) அடித்தார். இதனால் இந்தியன் வங்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்டை தோற்கடித்தது. இதில் 4 கோல்களை அடித்த ராஜா, ஆட்டத்தை தன் வசமாக்கினார்.

இன்றைய ஆட்டங்கள்

போபால் ஹாக்கி அகாதெமி-

சென்னை வருமான வரித் துறை

போட்டி நேரம்: காலை 6.30

தமிழ்நாடு லெவன்-

கேரள ஹாக்கி அணி

போட்டி நேரம்: காலை 8

ஐ.சி.எஃப்.-

பெங்களூர் பிரைன் ரோஸ்

போட்டி நேரம்: பிற்பகல் 2.30

ஹாக்கி ஆந்திரம்-

சென்னை தெற்கு ரயில்வே

போட்டி நேரம்: மாலை 4.30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.