பெல்பின்ஸ் கோப்பைக்கான 17 ஆவது மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி பாளையங்கோட்டையில் புதன்கிழமை தொடங்கியது. முதல் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி வென்றது.
பாளையங்கோட்டை ஹாக்கி நலச்சங்கம் சார்பில், அண்ணா விளையாட்டு மைதானத்தின் செயற்கைதளத்தில் நடைபெறும் இப் போட்டியின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. ஹாக்கி நலச்சங்கத் தலைவர் மேஜர் எஸ். பெனடிக்ட் தலைமை வகித்தார். பெல்பின்ஸ் நிறுவன இயக்குநர்கள் குணசிங் செல்லத்துரை, சஞ்சய்குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய சவேரியார் கல்லூரி முதல்வர் கில்பர்ட் கமிலஸ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
முதலாவது போட்டியில் வள்ளியூர் கிங்க்ஸ் பள்ளி அணியை, மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணி 0-3 என்ற கோல்கணக்கில் வென்றது.
தொடர்ந்து இம் மாதம் 23 ஆம் தேதி வரை 4 நாள்கள் போட்டி நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு பெல்பின்ஸ் கோப்பை, சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. 2 ஆவது நாளான வியாழக்கிழமை (ஆக.21) காலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ்.ஜெ.என். பள்ளி அணியும், மணப்பாறை பள்ளி அணியும் மோதுகின்றன. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணியும், பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி அணியும் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மெய்ப்பொருள்

மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


