பிரபல ஐபிஎல் வீரரை ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ய சொன்ன மும்பை வீரர் சஸ்பெண்ட்!

விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்...
பிரபல ஐபிஎல் வீரரை ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ய சொன்ன மும்பை வீரர் சஸ்பெண்ட்!
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட்டில் மீண்டுமொரு ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் ஐபிஎல் அணி வீரர் பிரவீன் டாம்பேவை ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யச் சொன்ன மும்பை ரஞ்சி வீரர் ஹிகன் ஷாவை சஸ்பெண்ட் செய்துள்ளது பிசிசிஐ.

இதுதொடர்பாக பிசிசிஐ விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடன் விளையாடும் வீரரை (அவர் ஐபிஎல் போட்டியிலும் ஆடுபவர்) ஸ்பாட் பிக்ஸிங் செய்ய சொல்லி ஹிகன் ஷா அணுகியுள்ளார். அந்த ஐபிஎல் வீரர் உடனே தன்னுடைய ஐபிஎல் அணியிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். உடனே பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் இத்தகவல் கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி விசாரிக்க பிசிசிஐ தலைவர் டால்மியா உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மேற்கொண்ட விசாரணையில் ஹிகன் ஷா, விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் அறிக்கையில் ஐபிஎல் வீரரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட ஐபிஎல் வீரர், பிரவீன் டாம்பே எனத் தெரிகிறது.

30 வயதான ஹிகன் ஷா, மும்பை அணிக்காக இதுவரை 37 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ளார். கடந்த ரஞ்சிப் போட்டியில் கூட அவர் 2 ஆட்டங்களில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com