தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

லோதா தீர்ப்பு எதிரொலி: ஐபிஎல்-லில் இரு புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐ முடிவு?

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் புதிய உரிமையாளர்களை நிர்ணயிப்பது. கூடுதலாக இரு அணிகளையும் ஐபிஎல்-லில் சேர்ப்பது....

Updated On :14 ஜூலை 2015, 10:40 am

லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐபிஎல்-லில் இரு புது அணிகளைச் சேர்ப்பது குறித்து பிசிசிஐ விவாதித்து வருகிறது. 2016 ஐபிஎல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்: 

1) தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் புதிய உரிமையாளர்களை நிர்ணயிப்பது. எனில், இந்தியா சிமெண்ட்ஸ், ஜெய்ப்பூர் ஐபிஎல் நிறுவனங்கள் ஐபிஎல்-லில் இருந்து நீக்கப்படவேண்டும். இதனால் சூதாட்டப் புகார் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுத்ததாக பிசிசிஐக்குப் பாராட்டுகள் கிடைக்கும். சென்னை, ராஜஸ்தான் ரசிகர்களுக்கும் ஏமாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

2) லோதா அறிவித்தபடி இரு அணிகளுக்கும் 2 ஆண்டுகள் தடை விதித்ததை உறுதிப்படுத்தலாம். ஆனால், அதன்பிறகு 6 அணிகளை மட்டும் கொண்டு ஐபிஎல்-ஐ நடத்தமுடியாது. எனவே புதிதாக 2 அணிகளைச் சேர்க்கலாம். 2 வருடங்கள் கழித்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் ஐபிஎல்-லில் ஆடும்போது 10 அணிகள் கொண்ட அணியாக ஐபிஎல் இருக்கும்.

3) சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குப் புதிய உரிமையாளர்களை நிர்ணயிப்பது, கூடுதலாக இரு அணிகளையும் ஐபிஎல்-லில் சேர்ப்பது. இதனால் 2016 ஐபிஎல்-லில் 10 அணிகள் பங்கேற்கும். பிசிசிஐக்கும் வருமானம் அதிகரிக்கும். அதிக வீரர்களை ஐபிஎல்-லில் ஈடுபடுத்தவும் முடியும்.

4) என்.சீனிவாசன் அணிக்குத் தடை கிடைத்திருப்பதால் அவரை ஐசிசி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்வது. பிசிசிஐயின் பிரதிநிதியாக ஐசிசி தலைவர் ஆகியிருப்பதால் பிசிசிஐ கட்டளையிட்டால் சீனிவாசனால் மறுக்கமுடியாது.

இதில் எந்த முடிவை பிசிசிஐ செயல்படுத்தபோகிறது என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.