லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறியபடி, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா சிமெண்ட்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்) மற்றும் ஜெய்ப்பூர் ஐபிஎல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டபிறகு நிருபர்களின் கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பதிலளித்தபோது கூறியதாவது:
கிரிக்கெட் தான் பெரிது என்றால் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு ஏற்படும் பண இழப்புகள் முக்கியமல்ல. சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பது குறித்து பிசிசிஐதான் முடிவு செய்யவேண்டும். பிசிசிஐயை சீரமைப்பது, பிசிசிஐ அமைப்பில் நிர்வாகிகளாக இருப்பவர்களின் வர்த்தக இரட்டை நலன் (conflict of interest) போன்றவை குறித்து இன்னமும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. நாங்கள் இன்னமும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


