இரண்டாவது முறையாக முறையற்ற பந்துவீச்சுக்காக பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸூக்குத் தண்டனை அளித்துள்ளது ஐசிசி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான காலே டெஸ்ட் போட்டியின்போது ஹபீஸின் பந்துவீச்சு குறித்து புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் அவர் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவைக் காட்டிலும் அதிகமாக மடங்கியது தெரியவந்தது. இதனால் அவர் அடுத்த ஒருவருடத்துக்கு பவுலிங் செய்ய தடை விதித்துள்ளது ஐசிசி. ஹபீஸ், தனது பந்துவீச்சை ஓராண்டு கால தடைக்குப் பிறகே மறுமதிப்பீடு செயய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வருடம், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஹபீஸின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. பிறகு அவர் பவுலிங் செய்யும் முறையை மாற்றிக்கொண்டதால் ஏப்ரல் 2015 முதல் மீண்டும் பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஆனால் இப்போது மீண்டும் அதே சிக்கலில் மாட்டியுள்ளதால் அவருக்கு ஒருவருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

திருப்போரூா் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

எதிா்க்கட்சிகளின் மாற்றம் முழக்கம், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியும்: அமைச்சா் துரைமுருகன்

மீண்டும் தமிழக முதல்வராவாா் மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

