இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் ஒரு நாள் ஆட்டம் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நேற்று நடந்தது. இதில் வங்கதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி ஆடும்போது முஸ்தாபிசர் வீசிய 25-வது ஓவரில், மிட் ஆஃப்புக்குப் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க ஓட ஆரம்பித்தார் தோனி. அப்போது தோனி வரும் பாதையில் முஸ்தாபிசர் குறுக்கே வந்ததால் அவரை தனது முழங்கை மற்றும் தோள்பட்டையால் இடித்தார் தோனி. இதில் முதலில் தடுமாறிய முஸ்தாபிசர், பிறகு காயம் ஏற்பட்டதை அறிந்து, ஓய்வு அறைக்குத் திரும்பினார்.
நான் விலகி ஓடுவேன் என்று அவர் நினைத்தார். அவர் விலகிவிடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் இரண்டு பேருமே விலகவில்லை மோதல் நடந்து விட்டது என்று போட்டி முடிந்தபிறகு பேட்டியளித்தார் தோனி.
இந்தச் சம்பவத்தை அடுத்து போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் தோனி மற்றும் முஸ்தாபிசர் ஆகிய இருவருக்கும் அபராதம் விதித்தார். சம்பளத்தொகையிலிருந்து 75% தோனிக்கும் 50% முஸ்தாபிசருக்கும் அபராதம் விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


