சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது.

Updated On :

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
 4-ஆவது கட்ட உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டிகள் கொலம்பியாவில் நடைபெற்றன. முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலையில் இந்திய வில்வித்தை சங்கம் இரண்டாம் தர இந்திய அணியையே இந்தப் போட்டிக்கு அனுப்பி வைத்தது. ஆடவர் காம்பவுண்ட் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், சர்வேஷ் பாரீக், சந்தீப் குமார், இசியா ராஜேந்தர் சனம் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி, 231 - 222 என்ற புள்ளிகள் கணக்கில் வெனிசூலா அணியை வீழ்த்தியது.
 கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகளான பாரீக் - திரிஷா தேவ், அமெரிக்காவின் ரியோ வில்டி - லெக்ஸி கெல்லர் ஜோடியிடம் 150 - 156 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியதால் இந்தியாவுக்கு 2-ஆவது வெண்கலம் கிடைப்பதற்கான வாய்ப்பு நழுவியது. ஒலிம்பிக் பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக முதல் தர இந்திய அணி இந்த வாரத்தில் பிரேசிலுக்கு செல்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.