வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணியில் ஆண்ட்ரூ ஃபெகிட்டி
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 30 வயதான ஆண்ட்ரூ ஃபெகிட்டிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 30 வயதான ஆண்ட்ரூ ஃபெகிட்டிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அக்டோபர் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்கிறது. முதல் போட்டி சிட்டகாங்கில் அக்.9 முதல் 13 வரையும், 2 ஆவது போட்டி, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அக்.17 முதல் 21ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
அண்மையில் இங்கிலாந்தில் முடிவடைந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின், ரயன் ஹாரிஸ், கிறிஸ் ரோஜர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
ஆண்ட்ரூ ஃபெகிட்டி: அதிக போட்டிகள் காரணமாக வேகப் பந்துவீச்சாளர்கள் மிச்செல் ஜான்சன், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இடதுகை பந்துவீச்சாளர் பாவத் அஹமது ஆகியோர் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளனர். இவர்கள் இல்லாத நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் ஜோ பர்ன்ஸ், பாட்ரிக் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டீபன் ஓ'கீஃபி ஆகியோர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பான் கிராஃப்ட் (22), மற்றும் ஆண்ட்ரூ ஃபெகிட்டி (30) ஆகியோர் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
அணி விவரம்: வங்கதேசத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் உத்தேச வீரர்கள் விவரம் வருமாறு: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஆடம் வோஜஸ், கேமரான் பான்கிராஃப்ட், ஜோ பர்ன்ஸ், பாட்ரிக் கம்மின்ஸ், ஆண்ட்ரூ ஃபெகிட்டி, உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிச்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், பீட்டர் நெவில், ஸ்டீபன் ஓ'கீஃபி, பீட்டர் சிடில், மிச்செல் ஸ்டார்க். இவர்களில் 7 வீரர்கள், 26 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்களாக இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

