கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பெயர் தெரியாத ஒரு வீரரை கடும் போட்டிக்கு இடையில், ரூ.4.2 கோடிக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
அந்த வீரருக்கு முதலாவது ஐ.பி.எல் ஏலமே அதுதான். கிரிக்கெட்டில் பெரிதாக எதையும் சாதிக்காத ஒரு வீரரின் மீது அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தது முட்டாள்தனம் என சில கிரிக்கெட் ஜாம்பவான்கள் அப்போது கருத்துத் தெரிவித்திருந்தனர்.
அவர் வேறு யாருமல்ல மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிரத்வெயிட்தான்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்- இங்கிலாந்து இடையிலான இறுதி ஆட்டத்தின்போது கடைசி ஓவரில் 4 பந்துகளில் நான்கு சிக்ஸர்களை அடித்தாரே அவர்தான்.
மேற்கிந்திய தீவுகள் பேட் செய்தபோது 19-ஆவது ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டானையும் மறக்க முடியாது. நெருக்கடி நிலையில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதற்கு அபாரத் திறமை வேண்டும். அவருடைய பந்துவீச்சை பற்றி குறிப்பிடும்போது "யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜோர்டான்' என ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன.
"தி நேஷனல்' பத்திரிகை ஒரு படி மேலே சென்று "Duke of Yokers'(யார்க்கரின் இளவரசன்) என்று எழுதியது.
காரணம் இறுதி ஆட்டத்தில் நெருக்கடிக்கு மத்தியில் 17 மற்றும் 19-ஆவது ஓவர்களை வீசிய அவர் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசிக் கட்ட ஓவர்களை வீசுவது என்பது டி20 போட்டியில் அவ்வளவு எளிதல்ல.
தோழர்கள்: கார்லோஸ் பிரத்வெயிட்டும், கிறிஸ் ஜோர்டானும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த பார்படோஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரே வயதினர். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள்.
கிறிஸ் ஜோர்டான் இளம் வயதிலேயே விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகையை பெற்று இங்கிலாந்திற்கு சென்றார். அங்கேயே உயர் கல்வியை முடித்தார்.
பின்னர் அந்த நாட்டின் குடிமகனாக மாறி அந்த நாட்டுக்காகவே கிரிக்கெட் விளையாடுகிறார்.
கார்லோஸ் பிரத்வெயிட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோருடன் ஒரே வகுப்பில் படித்த தோழி ஒருவர், உலகளவில் இவர்களைப் போல ஆயிரம் மடங்கு பிரபலமானவர்.
ஐ.பி.எல் ஏலம் முடிந்தபோது, "பிரபல பாடகி ஒருவரின் வகுப்புத் தோழர் என்பது மட்டுமே இதுவரை எனக்கான அடையாளம். இப்போதுதான் எனக்கென தனி அடையாளத்தைப் பெற்றுள்ளேன்' என்றார் கார்லோஸ் பிரத்வெயிட். அவர் வேறு யாருமல்ல. பிரபல பாடகி ரிகானாதான் அந்தத் தோழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

உங்களை நாடி வந்து பணியாற்றுவேன்: காரைக்குடி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


