நடப்பு ஐபிஎல் போட்டியில், சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. அதில், பெங்களூரு அணி பேட்டிங்கின்போது 17.3ஆவது ஓவரில் ஒரு சிறுவன் ஆடுகளத்துக்குள் நுழைகிறான்.
ஆட்டம் முடிவதற்கு வெறும் 15 பந்துகளே இருந்தன. அதில் 10 பந்துகளை எதிர்கொண்ட அவன் அடித்ததோ 35 ரன்கள். ஸ்டிரைக் ரேட் 350. அந்தப் பத்துப் பந்துகளும் 1,4,4,6,4,4,6,2,0,4 என விளாசப்பட்டிருந்தன. மைதானத்தின் எல்லாப் பகுதிக்கும் பந்தை அடித்ததால் "360 டிகிரி பேட்ஸ்மேன்' என அவனை செல்லப் பெயர் கொண்டு அழைக்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஹாரிஷ் ஷீல்ட் தொடர் கிரிக்கெட் நோக்கர்களின் மனதில் கால காலத்திற்கும் நினைவில் இருக்கும். அதற்குக் காரணமானவன் 12 வயதானதொரு சிறுவன். இந்திய கல்வி சங்கத்து அணிக்கு எதிராக அவன் அடித்த 439 ரன்கள் அனைவரது புருவங்களையும் உயர வைத்தன. அடுத்த சச்சின் என அந்தச் சிறுவனை பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின. ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது இளைஞனாகியுள்ள அவன்தான் மேலே குறிப்பிட்ட, இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் சர்ஃபராஸ் கான்.
கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் இப்படியாக எழுதினார். ""கிட்டத்தட்ட ஆறடி உயரமுள்ள புவனேஸ்வர் குமார், சுமார் 50 அடி தூரம் மூச்சிரைக்க ஓடி வந்து, தனது முழு சக்தியையும் பிரயோகித்து யார்க்கர் பந்தை, மிகத் துல்லியமாக வீசுகிறார். ஆனால், வெறும் 18 வயது நிரம்பிய இந்தச் சிறுவன், அலட்சியமாக அதை சுவீப் ஷாட்டாக பவுண்டரிக்கு பறக்கவிடுகிறான். இந்தப் பையனைப் பார்த்து பெருமைப்படுவதா? இல்லை, புவனேஸ்வர் குமாரைப் பார்த்துப் பரிதாபப்படுவதா? என குழப்பமாக உள்ளது''
""அனைத்து பேட்ஸ்மேன்களாலும் சுவீப் ஷாட்டை அடிக்க முடியாது. அதுவும், மிக வேகமாக வரும் துல்லியமான யார்க்கர் பந்தை ஒருவன் சுவீப் ஷாட்டாக அடிக்கிறான் என்றால், அவன் நிச்சயமாக கிரிக்கெட் ஜீனியஸாகவே இருக்க முடியும்'' என்றார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்ஸன்.
"எப்படிப் போட்டாலும் அடிக்கிறான், எங்களால் என்னதான் செய்ய முடியும்' என்றார் நகைச்சுவையாக ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர்.
இப்போது ஐபிஎல் போட்டிகளில் கோலோச்சும் சர்ஃபராஸ் கான், 2008 இல் ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டபோது 4ஆவது படித்துக்கொண்டிருந்தார்.
2015 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக அறிமுகமானபோது அவரின் வயது வெறும் 17 ஆண்டுகள் 177 நாட்கள் மட்டுமே. மிகக் குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர் இவர்தான். கடந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 21 பந்துகளில் 45 ரன்களை விளாசித் தள்ளினார். நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பியவரை நோக்கிச் சென்ற கோலி, விளையாட்டாக கையெடுத்து வணங்கி வரவேற்றார். "அந்தச் சிறுவனால் சட்டப்படி கார் கூட ஓட்ட முடியாது. ஆனால், இப்படி விளாசுகிறானே' என்றார் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்.
உங்களுக்கு போட்டியாக, உங்கள் அணியிலேயே ஒருவர் உருவாகிவிட்டாரே என பத்திரிகையாளர்கள் அவரைக் கேட்டதற்கு, "அவன் என் மகன்' என்றார் கெயில்.
2014, 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பிடித்த சர்ஃபராஸ், அங்கேயும் தன்னுடைய முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. 19 வயதுக்கு உள்பட்டவர்களின் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 7 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக அடித்துள்ளார். இது உலக சாதனையாகும். 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்றுனர் ராகுல் திராவிட், "இந்தச் சிறுவன்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் போகிறான்' என்றார்.
சச்சினை அவரது ஆரம்ப காலத்தில் பார்ப்பதுபோல உள்ளது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். சச்சினின் நுட்பமும், கோலியின் அதிரடியும் கலந்த கலவை இவர் என புகழாரம் சூட்டுகின்றனர். பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணியின் செல்லப்பிள்ளையாக இருந்த இவர். இப்போது இந்தியாவின் செல்லப் பிள்ளையாக மாறிவிட்டார். கிரிக்கெட் விளையாட்டை ரிலே ஓட்டத்துடன் ஒப்பிடுவார்கள். இந்தியாவின் சார்பில் 20 ஆண்டுகளாக அதை சச்சின் தலைமை தாங்கி ஓடினார். இப்போது கோலி ஓடுகிறார். எதிர்காலத்தில் சர்ஃபராஸ் கான் ஓடுவார் என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள் கிரிக்கெட் நோக்கர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

உங்களை நாடி வந்து பணியாற்றுவேன்: காரைக்குடி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


