இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக பாதுகாப்பு குழுவை அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணிக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதை பிசிசிஐ உறுதி செய்தால் மட்டுமே பங்கேற்போம். இல்லையெனில் போட்டியில் இருந்து விலகுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் அளிப்பதற்கு நாங்கள் அரசமைப்பல்ல என தெரிவித்திருந்தது.
இதையடுத்து இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், உள்துறை அமைச்சர் செளத்ரி நிஸ்ஸார் அலி கானும் ஆலோசித்தனர். அதன்பிறகு பாதுகாப்பு குழுவை இந்தியாவுக்கு அனுப்பி அங்குள்ள சூழல் குறித்து ஆராயுமாறு நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்திகள் 5; இலக்குகள் 7!

மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த மருந்துக் கடை அதிபருக்கு ஆயுள் தண்டனை

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4 ஆவது நாளாக தடை நீட்டிப்பு
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


