புது தில்லி: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவைச் சேர்ந்த 7 பாட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் தகுதி பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
மே மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும் சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்தின் தர வரிசையில் முதல் 34 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கணைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இதன்படி பெண்கள் பிரிவில் 7-வது இடம் பிடித்துள்ள சாய்னா நெவால், தகுதிப் பெற்றுள்ளார். கடந்த முறை லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நெவால் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோல தரவரிசையில் 9-வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்துவும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோரும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி மற்றும் பி.சுமீத் ரெட்டி ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
லண்டனில் கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 5 இந்திய பாட்மிண்டன் வீரர்கள் பங்கேற்ற நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தகுதிபெற்றுள்ள வீரர் வீராங்கணைகளுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

