

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த இரு அணிகளுக்கு இடையே பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வென்றது. 15 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய கிருனால் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
புள்ளிகள் பட்டியல்
அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
|---|---|---|---|---|---|
ஹைதராபாத் | 10 | 7 | 3 | 14 | +0.558 |
குஜராத் | 11 | 7 | 4 | 14 | -0.138 |
கொல்கத்தா | 10 | 6 | 4 | 12 | +0.206 |
மும்பை | 11 | 6 | 5 | 12 | -0.346 |
டெல்லி | 9 | 5 | 4 | 10 | +0.309 |
பெங்களூர் | 10 | 4 | 6 | 8 | -0.041 |
புணே | 11 | 3 | 8 | 6 | +0.087 |
பஞ்சாப் | 10 | 3 | 7 | 6 | -0.567 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.