இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் ரெய்னாவின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.
இதற்காக, கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் ரெய்னா. ரெய்னாவின் மனைவி பிரியங்கா நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.
பிரசவத்துக்காக மனைவி மருத்துவமனையில் உள்ள இந்தத் தருணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ள ரெய்னா அவற்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெயிட்டிங் வெயிட்டிங் என்று படங்களை வெளியிட்டு எழுதியுள்ளார்.
நாளை பெங்களூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தில் ரெய்னா கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருடைய நீண்டநாள் சாதனை ஒன்று முறியவுள்ளது.
2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னா இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட தவறவிட்டதில்லை. தற்போது மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றுள்ளதால் நாளைய போட்டியில் பங்கேற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து ஆடுகிற வீரர் என்கிற பெருமையை ரெய்னா இழக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.