ஐபிஎல்: ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு கிடைக்காத வீரர்கள்!

ஐபிஎல் என்பது பலருக்கும் பல கதவுகளைத் திறந்துவைக்கும் வாய்ப்பாக உள்ள நிலையில் சிலருக்கு மட்டும் அணியில் இடம்பெறமுடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இந்த ஐபிஎல் போட்டியிலும் ஓர் ஆட்டத்திலும் பங்குபெறாத முக்கிய வீரர்கள் இவர்கள்:
Updated on
1 min read

ஐபிஎல் என்பது பலருக்கும் பல கதவுகளைத் திறந்துவைக்கும் வாய்ப்பாக உள்ள நிலையில் சிலருக்கு மட்டும் அணியில் இடம்பெறமுடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இந்த ஐபிஎல் போட்டியிலும் ஓர் ஆட்டத்திலும் பங்குபெறாத முக்கிய வீரர்கள் இவர்கள்:

கோரி ஆண்டர்சன்

மும்பை அணியில் இடம்பெற்ற ஆண்டர்சனால் இந்த வருடம் ஒரு ஐபிஎல் ஆட்டத்திலும் பங்குபெறமுடியவில்லை. 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்யமுடியும் என்பதால் அந்தப் போட்டியில் ஆண்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.

ஷர்துல் தாக்குர்

பஞ்சாப் அணியில் இடம்பிடித்த ஷர்துல் தாக்குர், போட்டியின் பாதியில் விலக்கிக்கொள்ளப்பட்டார். ஆனாலும் பிறகு அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது.

பாபா அபரஜித்

2013-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வானார் பாபா அபரஜித். U19 உலகக்கோப்பையில் திறமையை வெளிப்படுத்தி அதிகக் கவனம் பெற்றதால் ஐபிஎல்-லிலும் தன்னை நிரூபிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அவர்மீது இருந்தது. ஆனால் எல்லாமே நேர்மாறாக நடந்தது.

இன்றுவரை ஐபிஎல்-லில் பாபா அபரஜித்துக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை! புனே அணி தொடர்ந்து தோற்றபோதும், பலருக்குக் காயம் ஏற்பட்டு விலகியபோதும்கூட தோனி சீந்தவில்லை. அதே பெஞ்ச்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com