செய்திகள் சில வரிகளில்...
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) நடுவர் குழு உறுப்பினராக தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் (என்ஆர்ஏஐ) இணைச் செயலர் பவன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


* சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) நடுவர் குழு உறுப்பினராக தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் (என்ஆர்ஏஐ) இணைச் செயலர் பவன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* ஐஎஃப்ஏ ஷீல்டு கால்பந்து போட்டியில் முகமதீன் ஸ்போர்டிங் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் கோகுலம் கேரளம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதில் ரியல் காஷ்மீர் எஃப்சியை சந்திக்கிறது முகமதீன் ஸ்போர்டிங்.
* தில்லி கிரிக்கெட்டில் சீனியர் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வாளர் பொறுப்புக்கு தில்லி அணியின் முன்னாள் கேப்டன் கீர்த்தி ஆஸாத் விண்ணப்பித்துள்ளார்.
* இந்திய பாட்மிண்டன் சங்கத்தால் அங்கீகரிக்கப்படாத போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களை அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
* கெளரவமிக்க "ஹிந்த் கேசரி' விருது வென்ற மல்யுத்த வீரர் ஸ்ரீபதி காஞ்சனாலே (86) வயது மூப்பு காரணமாக மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் திங்கள்கிழமை காலமானார்.
* எகிப்தில் நடைபெற்ற சிஐபி பிஎஸ்ஏ பிளாக் பால் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் தொடக்க சுற்றில் இந்தியாவின் மகேஷ் மங்கான்கர் 12- 10, 9- 11, 8- 11, 11- 7, 11- 1 என்ற கணக்கில் எகிப்து வீரர் முஸ்தஃபா அசாலிடம் வீழ்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...