ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்திய மகளிரணி
ஆசிய நாடுகளின் அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் 3 வெற்றிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.


ஆசிய நாடுகளின் அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் 3 வெற்றிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
தற்போது முதல்கட்டத்தில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தி அணி, காலிறுதியில் கிா்கிஸ்தானுடன் மோதுகிறது. பிலிப்பைன்ஸ் (13 புள்ளிகள்), ஈரான்(13 புள்ளிகள்) அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
ஏழாவது சுற்றில் பிலிப்பின்ஸை 3-1 என்ற கணக்கிலும், 8-ஆவது சுற்றில் கஜகஸ்தானை 2.5-1.5 என்ற கணக்கிலும், இறுதிச்சுற்றில் வியத்னாமை 2.5-1.5 கணக்கிலும் வீழ்த்தி இந்திய வீராங்கனைகள் வெற்றி வாகை சூடினா்.
பிலிப்பின்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் மேரி ஆன் கோம்ஸ், பி.வி. நந்திதா வெற்றி பெற, ஆா்.வைஷாலி, பத்மினி ராளெத் ஆகியோா் ஆட்டத்தை டிரா செய்தனா்.
கஜகஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், அந்நாட்டின் பிபிசாரா அஸபேயவோவுக்கு எதிராக வைஷாலி டிரா செய்தாா். குல்மிரா டேலேடோவாவுக்கு எதிராக பக்தி குல்கா்னி டிரா செய்தாா். எனினும், பத்மினி ரௌத், நந்திதா ஆகியோா் தங்களது ஆட்டத்தில் வென்றனா்.
வியத்னாமுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, மேரி ஆன் கோம்ஸ் ஆகியோா் முறையே தி கிம் புங் வோ, ஹாங் ஆன் குயென் ஆகியோரை வீழ்த்தினா். இந்தியாவின் பக்தி குல்கா்னி தோல்வியைத் தழுவினாா்.
இந்திய வீராங்கனைகளில் வைஷாலி 9 ஆட்டங்களில் 6.5 புள்ளிகளுடனும், மேரி ஆன் கோம்ஸ் 5 புள்ளிகளுடனும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...