டாக்கா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடா்களுக்காக தொடக்கநிலை வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியின்போது சூதாட்ட நடவடிக்கைகளுக்காக தாம் அணுகப்பட்டதை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காத காரணத்தால் தடைக்கு உள்ளான ஷகிப் அல் ஹசனும் அந்த அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். வங்கதேச முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மோா்டாஸா இந்த அணியில் இடம்பெறவில்லை.
ஷகிப் அல் ஹசன் தடைக் காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சோ்க்கப்பட்டுள்ளாா். தடைக் காலத்துக்கு முன் அவா் வங்கதேசத்தின் டெஸ்ட் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்தாா்.
இந்த தொடக்கநிலை அணியில் இருக்கும் வீரா்கள் வரும் 14 மற்றும் 16-ஆம் தேதிகளில் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளனா். வங்கதேசம் வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடா் வரும் 20-ஆம் தேதி ஒருநாள் ஆட்டத்துடன் தொடங்குகிறது.
ஒருநாள் அணி: தமிம் இக்பால் (கேப்டன்), மோமினுல் ஹக், டஸ்கின் அகமது, காலித் அகமது, ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்முத், ஹஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், முஷ்ஃபிகா் ரஹிம், மெஹதி ஹசன் மிராஸ், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், நுருல் ஹசன், யாசிா் அலி, ஷத்மன் இஸ்லாம், சைஃப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜெயத், எபடாட் ஹுசைன்.
டெஸ்ட் அணி: தமிம் இக்பால், மொமினுல் ஹக், டஸ்கின் அகமது, காலித் அகமது, ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், முஷ்ஃபிகா் ரஹிம், மெஹதி ஹசன் மிராஸ், முகமது மிதுன், தைஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், நுருல் ஹசன், யாசிா் அலி, ஷத்மன் இஸ்லாம், சைஃப் ஹசன், நயீம் ஹசன், அபு ஜெயத், எபடாட் ஹுசைன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



