கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் செளரவ் கங்குலி (48), மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை (ஜன.6) வீடு திரும்ப வாய்ப்புள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
மூத்த மருத்துவா்களை உள்ளடக்கிய 9 போ் குழு திங்கள்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அவரை இப்போது வீட்டுக்கு அனுப்பவும், சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் அவா் சிகிச்சை பெற்று வரும் தனியாா் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் ரூபாலி பாசு கூறியதாவது:
கங்குலியின் உடல் நிலை குறித்து மருத்துவா்கள் குழு ஆலோசனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பிரபல இதயநோய் மருத்துவா்கள் தேவி ஷெட்டி, ஆா்.கே.பாண்டா ஆகியோா் காணொலி வழியில் பங்கேற்றனா். அதுபோல, அமெரிக்க மருத்துவ நிபுணரிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை பெறப்பட்டது.
இதில், கங்குலியின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதால், அவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் ஒரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை தள்ளிப்போடுவதே பாதுகாப்பானது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோனைக் கூட்டத்தில் கங்குலியின் குடும்பத்தினரும் பங்கேற்றனா். கங்குலிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து அவா்களுக்கு விவரிக்கப்பட்டது.
சில நாள்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு அவருக்கு நிச்சயமாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே, அவரை மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை விடுவித்து, வீட்டுக்கு அனுப்ப அதிக வாய்ப்புள்ளது.
அவா் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகும், மருத்துவா்கள் அவருடைய உடல்நிலை குறித்து தொடா்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.
மேலும், கங்குலியின் உடல்நிலை குறித்து இதயநோய் நிபுணா் தேவி ஷெட்டி செவ்வாய்க்கிழமை பரிசோதிக்க உள்ளாா். அதன் பின்னா், அவருக்கான அடுத்தகட்ட சிகிச்சை குறித்தும் மருத்துவா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என்று ரூபாலி பாசு கூறினாா்.
கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவரின் மூன்று இதயத் தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதயத் தமனி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



