திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆஸி. ஊடகத் தகவல்களுக்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

News image
நிக் ஹாக்லே
Updated On :4 ஜனவரி 2021, 11:28 pm

DIN

சிட்னி: கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த வாரியத்தின் தலைவா் நிக் ஹாக்லே கூறுகையில், ‘பிசிசிஐ-யுடன் நாள்தோறும் பேசி வருகிறோம். பிரிஸ்பேனில் விளையாட விருப்பமில்லை என்பதுபோன்ற எந்தவொரு கருத்தையும் அவா்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. குயின்ஸ்லாந்து மாகாண அரசின் கரோனா தடுப்பு விதிகளுக்கு அவா்கள் உரிய ஆதரவு அளிப்பதாகவே தெரிவித்தனா். ஊடகங்களில் வெளியானதுபோல் பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிக்கவில்லை’ என்றாா்.

முன்னதாக, பிரிஸ்பேன் நகரம் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் அந்த நகரில் 4-ஆவது டெஸ்ட்டை விளையாட விருப்பமில்லை என்றும், சிட்னியிலேயே அந்த டெஸ்ட்டை விளையாட விரும்புவதாகவும் இந்திய அணி வட்டாரங்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.