நாட்டிற்காக விளையாடியதில் மகிழ்ச்சி; ஒலிம்பிக் அனுபவம் மிகச் சிறந்தது: பவானி தேவி

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதில் கிடைத்த அனுபவம் மிகப்பெரியது என்றும் வாள் வீச்சு வீராங்கனை பவானி தெரிவித்துள்ளார். 
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (கோப்புப் படம் )
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (கோப்புப் படம் )

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதில் கிடைத்த அனுபவம் மிகப்பெரியது என்றும் வாள் வீச்சு வீராங்கனை பவானி தெரிவித்துள்ளார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் வாள் வீச்சு பிரிவில் முதல்முறையாக இந்தியா சார்பில் பவானி தகுதி பெற்று போட்டியில் கலந்துகொண்டார். 

தனிநபா் சப்ரே பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில்,  2-ஆவது சுற்றில் போராடி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும், அதில் நிறைய கற்றுக்கொண்டதாக பவானி தேவி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ஒலிம்பிக் போட்டியில் எனது பங்களிப்பை அளித்தேன். எனினும் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்துவிட்டேன். அது எனக்கு மனச்சோர்வை அளித்தது. 

எனினும் ஒலிம்பிக் பயிற்சி மற்றும் ஒலிம்பிக் விளையாட்டின்போது கிடைத்த அனுபவத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். ஒலிம்பிக் வரை வருவது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு போட்டியிலும் நாம் நம்மை மெருகேற்றிக்கொள்ள முடியும். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிற்காக தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒலிம்பிக் போட்டியில் மட்டுமல்லாது, எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்காக தங்கம் வெல்ல வேண்டும். எதிர்காலத்தில் வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com