ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15ஆவது ஐபிஎல் சீசன் போட்டி நேற்று தொடங்கியது. சீசனின் முதல் போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினர்.
இதையும் படிக்க | துப்பாக்கி பிடித்தபடி மாஸாக உள்ள விஜய்...அதிர வைத்த புதிய அப்டேட்
இருப்பினும், சிறப்பாக பந்து வீசிய குல்தீப் ரோகித்தின் விக்கெட்டை கைப்பற்றினார். குல்தீப்பின் சுழலில் மற்ற வீரர்கள் நிலைகுலைந்தாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய, கிஷன் அரை சதம் அடித்தார். இறுதியாக, ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை 177 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தில்லி அணி சார்பாக குல்தீப் 18 ரன்கள் விட்டு கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தில்லி அணி களமிறங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!

எஸ்ஐஆா் நடைமுறை மிக வெளிப்படையானது: தலைமைத் தோ்தல் ஆணையா் பேட்டி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
தினப்பலன்கள் - தனுசு
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

