ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த முறையும் பவர் பிளேவில் தேவ்தத் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தார் உமேஷ் யாதவ். இதனால், ராஜஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திணறியது. சற்று தாக்குப்பிடித்து விளையாடி அதிரடிக்கு மாற முயற்சித்த ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று விளையாடி 38-வது பந்தில் அரைசதத்தை எடுத்தார்.
இதனிடையே, கருண் நாயரும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் சற்று அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார். கடைசி நேரத்தில் அதிரடிக்கு உதவ வேண்டிய நேரத்தில் 17-வது ஓவரில் பராக் 12 பந்துகளில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்திலேயே சாம்சனும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், டிம் சௌதி வீசிய 19-வது ஓவரில் ஷிம்ரோன் ஹெத்மயர் 2 சிக்ஸர் விளாச அந்த ஓவரில் ராஜஸ்தானுக்கு 20 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிம்ரோன் ஹெத்மயர் 13 பந்துகளில் 27 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 பந்துகளில் 6 ரன்களும் எடுத்தனர்.
கொல்கத்தா தரப்பில் டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அனுகுல் ராய் மற்றும் ஷிவம் மவி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான இந்திரஜித், ஃபிஞ்ச் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ், ராணா சிறப்பான பேட்டிங் செய்தனர்.
ஷ்ரேயஸ் 34 ரன்களுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த ரிங்கு சிங், கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.
அதிகபட்சமாக கொல்கத்தா அணி சார்பாக ராணா 48 ரன்களும் ரிங்கு சிங் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
நகமுராவுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா! வைஷாலி, திவ்யாவுக்கு முதல் வெற்றி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


