டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் புதிய சாதனை
By DIN | Published On : 10th July 2022 01:06 PM | Last Updated : 10th July 2022 01:07 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளேவில் அதிகமான டாட் பந்துகள் வீசி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் 170 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் புவனேஷின் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அபாரமாக பந்து வீசி புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து 15 ரன்களை மட்டுமே வழங்கினார். மேலும் முதல் ஓவரை மெய்டனும் செய்தார். இதன் மூலமாக அவர் பவர்பிளேவில் 500 டாட் பந்துகளை வீசி சாதனைப் படைத்துள்ளார்.
121 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரினை வெற்றிப் பெற்றது.
டி20 போட்டி வரலாற்றில் பவர்பிளேயில் அதிகமான டாட் பந்துகளை வீசியவர்கள் பட்டியல்:
- புவனேஷ்வர் குமார் (இந்தியா) 500
- சாமுவேல் பத்ரி (மே.இ.தீவுகள்) 383
- டிம் சௌதி (நியூசிலாந்து) 368