ரோகித் சர்மாவை திட்டிய ஹார்திக் பாண்டியா?
By DIN | Published On : 10th July 2022 06:49 PM | Last Updated : 10th July 2022 06:49 PM | அ+அ அ- |

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஹார்திக் பாண்டியா ரோகித் சர்மாவை ஆபாசமாக திட்டியதாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.
இந்தியாவின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பந்து வீசும் போது ‘எனது பவுலிங் போது நான் சொல்வதை கவனி. வேறு யார் சொல்வதையும் கேட்காதீர்கள்” என ஃபீல்டிங் செய்பவரைப் பார்த்து ஆபாசமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மறைமுகமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவைத்தான் குறிப்பிடுகிறதென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஹார்திக்அபுசிவ்ரோகித் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. ஹார்திக்கின் இந்த செயல் கிரிகெட் ரசிகர்களால் மத்தியில் பேசுபொருளாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரோகித் சர்மாவும் ஹார்திக் பாண்டியாவும் சாதாரணமாகவே இருக்கின்றனர். இது ரசிகர்களால் கிளப்பப்பட்ட வதந்தியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா இக்கிலாந்துக்கு இடையேயான 3வது டி20 போட்டி இனறு இரவு 7 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.