புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திய வீரர்களுடன் தோனி சந்திப்பு

இந்தியா இங்கிலாந்து அணியை வெற்றிப் பெற்ற பிறகு இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் வீரர்களை சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :10 ஜூலை 2022, 10:25 am

DIN


இந்தியா இங்கிலாந்து அணியை வெற்றிப் பெற்ற பிறகு இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் வீரர்களை சந்தித்துப் பேசினார்.

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 170 ரன்களை எடுத்தது. ரோகித் சர்மா ஜடேஜா நன்றாக விளையாடினார்கள். பும்ரா, புவனேஷ்வர் குமார் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா 2-0 நிலையில் தொடரினை வென்றது. 

இந்த வெற்றிக்குப் பிறகு முன்னாள் இந்திய கேப்டனும், வீரருமான எம்.எஸ். தோனி தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்துப் பேசினார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 

பிசிசிஐ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தினைப் பதிவிட்டு, “தலைசிறந்த தோனி பேசும் போது எப்போதும் எல்லா காதுகளும் கேட்டுக்கொள்ளும்” என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.