சதத்தை தந்தைக்கு சமர்ப்பணம் செய்த நியூசிலாந்து வீரர்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில் இச்சதத்தினை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்டில் இச்சதத்தினை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். 

நியூசிலாந்து அயர்லாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடி வந்தது. 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 360 ரன்களை குவித்தது. இதில் மார்டின் கப்டில் 115 ரன்களை எடுத்தார். இதில் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம். இது அவரது 18வது சதம் ஆகும். 

கடினமான இலக்கை தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி அபாரமாக விளையாடி 359 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தொல்வியுற்றது. இதில் பால் ஸ்டிரிலிங் 120 ரன்களும், ஹேரி டெக்டர் 108 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் அடுத்து 3 டி20 போட்டிகள் விளையாட இருக்கிறது. 

ஆட்டநாயகன் விருது பெற்ற மார்டின் கப்டில் கூறியதாவது: 

75 ரன்கள் வரை நன்றாக விளையாடினேன். பிறகு என்னால் ஒழுங்காக விளையாட முடியவில்லை. இருப்பினும் இந்த சதம் முக்கியமானது. 5 வருடங்களுக்கு முன்பு எனது தந்தையை இழந்தேன். இந்த சதம் அவருக்காக சமர்ப்பணம். குறைவான ஓவர் கொண்ட விளையாட்டில் விளையாடுவது விருப்பமாக இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com