ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

தில்லி கேபிடல்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்க தவறியதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை இரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த தில்லி அணி நேற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், ஐபிஎல் விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்க தவறியதால் தில்லி அணியின் கேப்டனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
நான் ரசிகர்களுக்காக விளையாடுகிறேன்: வைரலாகும் தோனியின் பதிவு

முன்னதாக சென்னை அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லுக்கும் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், விபத்துக்கு பிறகு தனது முதல் அரைசதத்தை அடித்து அசத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com