கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு இரண்டாவது கோப்பை!

News image

@RCBTweets

Updated On :5 பிப்ரவரி 2026, 5:56 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த ஆர்சிபி அணி தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களில் நடையைக்கட்டினாலும், நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 3 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 212.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா வோல் தம் பங்கிற்கு 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனால் ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன்முலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2023இல் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் முதலாவது சீசனில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

2024இல் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி சாம்பியனாக முதல்முறையாக மகுடம் சூடியது.

2025இல் மீண்டுமொருமுறை தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியனானது..

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் துரதிருஷ்டம் இந்தாண்டும் தொடருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.