மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வதோதராவில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; 204 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லாரா வோல்வர்ட் அதிரடியாக 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
லிஸெல்லே லீ 37 ரன்களும் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), சின்னல்லே ஹென்றி 35 ரன்களும் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
பெங்களூரு தரப்பில் சயலி சத்கரே, அருந்ததி ரெட்டி மற்றும் நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
Summary
In the final match of the Women's Premier League cricket series, Delhi Capitals, batting first, scored 203 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெங்கடேஷ் ஐயர், விராட் கோலி அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 223 ரன்கள் இலக்கு!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



