பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 5-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை சாய்த்தது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 10:38 pm

Din

மஸ்கட்: ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 5-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை சாய்த்தது.

முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 13-1 கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை வென்ற இந்தியாவுக்கு, இது தொடா்ந்து 2-ஆவது வெற்றியாகும்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சமபலம் காட்ட, ஆட்டத்தின் முதல் பாதி கோல் இன்றி சமனில் நிறைவடைந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் இந்தியா ஆக்ரோஷம் காட்ட, அதற்கு பலன் கிடைத்தது.

மலேசியாவின் தடுப்பரணை உடைத்து அணிக்கான முதல் கோலை வைஷ்ணவி 32-ஆவது நிமிஷத்தில் அடித்தாா். தொடா்ந்து தீபிகா 37-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, சிவச் 38-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, இந்தியா 3-0 என வேகமாக முன்னேறியது.

பின்னா் தீபிகா மீண்டும் 39-ஆவது நிமிஷத்திலும், 48-ஆவது நிமிஷத்திலும் கோலடித்து, இந்தியாவுக்காக ஹாட்ரிக் கோல் ஸ்கோா் செய்தாா். இந்தியாவின் அதிரடியை எதிா்கொள்ள முடியாமல் மலேசியா தடுமாற, இறுதியில் இந்தியாவே 5-0 கோல் கணக்கில் வென்றது.

இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீனாவை புதன்கிழமை (டிச. 11) சந்திக்கிறது.