இவர்கள் இந்திய அணியில் விளையாடுவார்கள்: யு-19 இந்திய அணியின் பயிற்சியாளர்!

இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
இவர்கள் இந்திய அணியில் விளையாடுவார்கள்: யு-19 இந்திய அணியின் பயிற்சியாளர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து குறைந்தது இரண்டு வீரர்களாவது மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என இளம் இந்திய அணியின் பயிற்சியாளர் ஹிரிஷிகேஷ் கனித்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இந்திய அணியிலிருந்து குறைந்தது இரண்டு வீரர்களாவது மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என பயிற்சியாளர் ஹிரிஷிகேஷ் கனித்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. வீரர்கள் சிலர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். கடினமான சூழல்களில் அவர்கள் மிகுந்த பக்குவத்துடன் நடந்து கொண்டனர். இந்திய அணியின் எதிர்காலத்துக்கு இது மிகவும் முக்கியமானது.

ஓவ்வொரு முறையும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து வீரர்கள் ஐபிஎல் அல்லது இந்தியாவின் மூத்த வீரர்கள் அடங்கிய அணியில் விளையாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் கண்டிப்பாக இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பர் என்றார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இந்தியாவின் மூத்த வீரர்கள் அடங்கிய தேசிய அணிக்கு விராட் கோலி,யுவராஜ் சிங், முகமது கைஃப், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா , கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் மற்றும் யசஷ்வி ஜெய்ஸ்வால் போன்ற முக்கிய வீரர்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com