விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு கிடைத்துள்ள மிகப் பெரும் வாய்ப்பு: முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தி இந்தியாவில் திறன்மிக்கதாக உள்ளது என்கிறார் பிராட்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்வதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 15 முதல் ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இடம்பெறாமலிருந்த விராட் கோலி மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகினார்.

கோப்புப்படம்
இது மிகப் பெரிய சாதனை: பும்ராவைப் புகழ்ந்த அஸ்வின்!

இந்த நிலையில், இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்வதற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளே நான் பார்த்ததிலேயே மிகவும் சவாலான போட்டிகள். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இருப்பினும், இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தி இந்தியாவில் திறன்மிக்கதாக உள்ளது. இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்ட் தொடரை வெல்ல கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. விராட் கோலி அணியில் இல்லாததது இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com