ஐஎஸ்எல் தொடரில் முதல் 6 இடங்களில் நுழைவோம் என சென்னையின் எஃப்சி பயிற்சியாளா் ஓவென் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஐஎஸ்எல் 2023-24 சீஸன் பிளே ஆஃப் சுற்று கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே நான்கு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மேலும் 2 இடங்கள் உள்ள நிலையில், இதுதொடா்பாக பயிற்சியாளா் கோயல் சனிக்கிழமை கூறியது: கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பலம் வாய்ந்த மோகன்பகான் அணியுடன் மோதவுள்ளோம். சென்னை அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் கடுமையாக உழைக்க வேண்டும். ஹைதராபாத் ஆட்டத்தில் தோற்காமல் இருந்திருந்தால் 6-ஆவது இடத்தில் இருந்திருப்போம். மோகன்பகான் அணி மிகவும் சவாலைத் தரும். ஆனால் சென்னை வீரா்கள் அச்சமின்றி ஆடுவா். இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன. அவற்றில் வென்றால் கட்டாயம் முதல் 6 இடங்களில் நுழைவோம் என்றாா்.
தொடர்புடையது

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்

சென்னையின் எஃப்சிக்கு முதல் வெற்றி

வெற்றியுடன் தொடங்க சென்னையின் எஃப்சி முனைப்பு: இன்று மும்பையுடன் மோதல்

ஐஎஸ்எல் 2026: சென்னையின் எஃப்சி அணி அறிவிப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


