தைபேய்: ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இன்று ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 56:53 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று அசத்தினார்.
ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் யாஷஸ் பலக்ஷா இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 800 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பூஜா தங்கமும், ட்விங்கிள் சௌதரி வெள்ளியும் வென்றனர். தங்கம் வென்ற பூஜா ஏற்கெனவே 1500 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடவருக்கான 800 மீட்டர் தடை தாண்டுதலில் கிருஷ்ணன் குமார் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளி வென்றார்.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ரோஹித் யாதவ் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்றார்.
iதன்மூலம், தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல் இந்தியா மொத்தம் 11 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

மீண்டும் பெண்களுக்கான திட்டங்கள்: மேற்கு தொகுதி அமமுக வேட்பாளா் உறுதி

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


