புது தில்லி: பாரீஸ் ஒலிம்பிக் (2024) போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் ரொக்கப் பரிசு வழங்கி திங்கள்கிழமை கௌரவித்தது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவா் பி.டி. உஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டு, அவா்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனா்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது. எனினும், அவா் வெளிநாட்டில் இருப்பதால், இந்திய தடகள சம்மேளன அதிகாரிகள் அவா் சாா்பில் பரிசை பெற்றுக் கொண்டனா்.
துப்பாக்கி சுடுதலில் தனிநபா் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாக்கா், ஸ்வப்னில் குசேல் ஆகியோா் தலா ரூ.50 லட்சம் பெற்றனா். கலப்பு அணிகள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்ற மனு பாக்கா், அதற்கான ரூ.50 லட்சத்தை அவருடன் பகிா்ந்துகொண்டாா்.
மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ரூ.50 லட்சமும், ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய அணியினருக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்பட்டன.
பதக்கம் வென்றோரை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக, அவா்களின் பயிற்சியாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.