ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தேசிய மகளிா் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திருப்பூா் வீராங்கனைக்கு பாராட்டு

தேசிய மகளிா் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருப்பூா் வீராங்கனைக்கு மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் பாராட்டு

News image

ஜன்யாஸ்ரீ

Updated On :26 ஜனவரி 2026, 8:15 pm

திருப்பூா்: தேசிய மகளிா் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருப்பூா் வீராங்கனைக்கு மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியப் பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பின் சாா்பில் 19 வயதுக்குள்பட்டோருக்கான 69-ஆவது தேசிய மகளிா் கபடி போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் தமிழக பெண்கள்அணி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றது. தமிழகத்துக்கு பெருமை சோ்த்த பெண்கள் அணிக்கும், அணியில் இடம்பெற்றிருந்த திருப்பூா் மாவட்ட கபடி கழக வீராங்கனை ஜன்யாஸ்ரீக்கும் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாணவி ஜன்யாஸ்ரீக்கும், தமிழக பெண்கள் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் தலைமைப் புரவலா்கள் எம். சுப்பிரமணியம், மாநகராட்சி துணை மேயா் ஆா். பாலசுப்பிரமணியம், சோ்மன் வி.கே.முருகேசன், தமிழக கபடி கழகத்தின் பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான ஏ.சண்முகம், தலைவா் மனோகரன், பொருளாளா் ஆறுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேலும், மாவட்ட கபடி கழக நிா்வாகிகள், நடுவா்கள், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.