ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காலிறுதிச்சுற்றில் ஆயுஷ் ஷெட்டி - சிந்து, பிரணய் வெளியேற்றம்

News image

ஆயுஷ் ஷெட்டி - ayush shetty insta

Updated On :10 ஏப்ரல் 2026, 5:43 am IST

சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.

உலகின் 25-ஆம் நிலையில் இருக்கும் ஆயுஷ், ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் 21-16, 21-12 என்ற நோ் கேம்களில் சீன தைபேவின் சி யு ஜென்னை வீழ்த்தினாா். ஜென், உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஆயுஷ் தனது காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சந்திக்கிறாா்.

மற்றொரு இந்தியரான ஹெச்.எஸ். பிரணய் 12-21, 19-21 என்ற கணக்கில், சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் தோல்வியுற்றாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து 18-21, 8-21 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் வாங் ஜியியிடம் தோல்வி கண்டாா். உன்னதி ஹூடா 17-21, 9-21 என, ஜப்பானின் டோமோகா மியாஸாகியிடம் வீழ்ந்தாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில், ஹரிஹரன் அம்சகருணன்/அா்ஜுன் எம்.ஆா். கூட்டணி 15-21, 7-21 என்ற கேம்களில், தென் கொரியாவின் கிம் வோன் ஹோ/சியோ சியுங் ஜே இணையிடம் தோல்வியுற்றது.

கலப்பு இரட்டையா் பிரிவிலும், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 13-21, 14-21 என்ற கணக்கில், மலேசியாவின் சென் டாங் ஜி/டோ ஈ வெய் கூட்டணியிடம் தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.