கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:52 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் கேரளா தரப்பில் விக்டா் பா்தோமியு 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கான பதிலடியாக ஒடிஸாவின் ரஹிம் அலி 27-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

அதன் பிறகு இரு அணிகளுமே விடாப்பிடியாக விளையாட, முதல் பாதி அப்படியே நிறைவடைந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் இதே நிலை நீடிக்க, கடைசி தருணத்தில் (90+4’) கேரளாவுக்காக மத்தியாஸ் ஹொ்னாண்டஸ் கோல் அடித்தாா்.

இதனால் கேரளா 2-1 கோல் கணக்கில் வெற்றி கண்டது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, கேரளா 3-ஆவது வெற்யோடு 11 புள்ளிகளுடன் 9-ஆம் இடத்திலும், ஒடிஸா 4-ஆவது தோல்வியோடு 6 புள்ளிகளுடன் 13-ஆம் இடத்திலும் உள்ளன.

அடுத்த ஆட்டத்தில், நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மோதுகின்றன.