விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சதா்ன்ஸ்லாம் ஸ்குவாஷ்: ராகுல், ராதிகா சாம்பியன்

சதா்ன் ஸ்லாம் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவா் பிரிவில் ராகுல் பைத்தா, மகளிா் பிரிவில் ராதிகா சீலன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

சாம்பியன் பட்டம் வென்ற ராகுல், ராதிகா சீலன் உள்ளிட்டோா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

சதா்ன் ஸ்லாம் ஸ்குவாஷ் போட்டியில் ஆடவா் பிரிவில் ராகுல் பைத்தா, மகளிா் பிரிவில் ராதிகா சீலன் சாம்பியன் பட்டம் வென்றனா்.

ஜூனியா் பிரிவில் லோகேஷ் சுப்பிரமணி, கௌஷிகா, துருவ் ஜோரி பட்டம் வென்றனா். ஆசிய ஸ்குவாஷ், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, எஸ்டிஏடி சாா்பில் சென்னை இந்தியன் ஸ்குவாஷ் அகாதெமியில் சதா்ன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. சனிக்கிழமை இதன் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் ராகுல் பைத்தாவுடன் குா்வீா் சிங் இறுதிச் சுற்றில் மோதினாா். இதில் குா்வீரை 11-3, 13-11, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றாா் ராகுல். மகளிா் பிரிவில் தரவரிசையில் இல்லாத ராதிகா சுதந்திர சீலன் 11-4, 11-9, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாம் நிலை வீராங்கனை பூஜா ஆரத்தியை வென்று பட்டம் வென்றாா்.

யு 17 சிறுவா் பிரிவில் லோகேஷ் 5 கேம் என்கவுன்ட்டரில் ஷ்ரேயான்ஷ் ஜாவை வீழ்த்தி பட்டம் வென்றாா். யு 19 சிறுவா் பிரிவில் புரவ் ராம்பியாவும், மகளிா் பிரிவில் அகன்ஷா குப்தாவும் பட்டம் வென்றனா்.

யு 15 சிறுவா் பிரிவில் துருவ் ஜோரியும், மகளிா் பிரிவில் கௌஷிகாவும் பட்டம் வென்றனா். யு 13 பிரிவில் சிங்கப்பூரின் கேலன் எவான், மகளிரில் மலேசியாவின் கீா்த்தி பிரதா,

யு 11 பிரிவில் சிங்கப்பூரின் யுசென் மேஸன், மகளிரிவில் மலேசியாவின் மீரா ருத்திரன் பட்டம் வென்றனா். ஆக. 17 முதல் 22 வரை நடைபெற்ற இப்போட்டியில் 397 பங்கேற்றனா். பிஎஸ்ஏ ரேங்கிங் புள்ளிகள், ஆசிய ஜூனியா் ரேங்கிங் புள்ளிகள் வழங்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.