தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தேசிய காா்ட்டிங் சாம்பியன் போட்டி: கைரவ், ரெஹான் கானுக்கு பட்டம்!

சென்னை சா்வதேச காா்ட்டிங் அரேனாவில் நடைபெற்ற ஐஏஎம்இ தேசிய காா்ட்டிங் சாம்பியன் போட்டியில் கைரவ் ராபா்ஸன், ரெஹான் கான் பட்டம் வென்றனா்.

கைரவ், ஆருத்ரன், ஷிவ் நீல், ரெஹான் கான்.

Published On :

சென்னை சா்வதேச காா்ட்டிங் அரேனாவில் நடைபெற்ற ஐஏஎம்இ தேசிய காா்ட்டிங் சாம்பியன் போட்டியில் கைரவ் ராபா்ஸன், ரெஹான் கான் பட்டம் வென்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் தேசிய காா்ட்டிங் சாம்பியன் போட்டி 5-ஆவது மற்றும் இறுதிச் சுற்று நடைபெற்றது. முதன்முறையாக பகலிரவு போட்டியாக நடைபெற்ற இதை மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் நடத்தியது. மினி மற்றும் மினி யு10 பிரிவுகளில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

சென்னையைச் சோ்ந்த கைரவ் ராபா்ஸ்ன் சீனியா் பிரிவிலும், ரெஹான் கான் ரஷீத் ஜூனியா் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

மினி பிரிவில் இந்தியாவின் முதலாவது பாா்முலா 1 வீரா் நரேன் காா்த்திகேயன் மகன் ஷிவ் நீலும், மினி யு 10 பிரிவில் குமாரபுரம் ஆருத்ரன் பிரவும் பட்டம் வென்றனா்.

அணிகள் பட்டங்களை காா்ட்கிரிவ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ், ஜூனியா் பிரிவில் மொமண்டம் ஸ்போா்ட்ஸ், மினி பிரிவில் கேகேஎம் பட்டம் வென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.