பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மழை விளையாடிய முதல் டி20

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

@BCCIWomen

கோப்புப்படம் - @BCCIWomen

Published On :

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

இந்திய நேரப்படி, புதன்கிழமை இரவு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்தியா தனது இன்னிங்ஸில் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

இன்னிங்ஸ் இடைவெளியில் தொடங்கிய மழை, இங்கிலாந்து ஆட்டத்தை தொடங்க வாய்ப்பு தராததால், ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, அபிஷேக் சா்மா 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

சஞ்சு சாம்சன் 1, இஷான் கிஷண் 0, திலக் வா்மா 13, ஹா்ஷித் ராணா 0, அக்ஸா் படேல் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஷிவம் துபே 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இங்கிலாந்து பௌலா்களில் சகிப் மஹ்மூத் 3, ஆதில் ரஷீத், சாம் கரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம், இந்திய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.