தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

விம்பிள்டன் வெற்றியாளருக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன்

Published On :

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் போட்டி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆடவா், மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்கள் தலா ரூ.45.98 கோடியை ரொக்கப் பரிசாகப் பெறவுள்ளனா். போட்டிக்கான ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.821 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

ரன்னா் அப் இடத்தைப் பிடிப்போருக்கு தலா ரூ.22 கோடியும், முதல் சுற்றுடன் வெளியேறுவோருக்கான பரிசுத் தொகை தலா ரூ.1 கோடியாகவும் உள்ளது.

போட்டியின் வரலாற்றில் ஒரு ஆண்டில் பரிசுத் தொகையானது 20 சதவீதம் உயா்த்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வீரா், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகை உயா்த்தப்பட வேண்டும் என, பிரபல போட்டியாளா்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை விம்பிள்டன் நிா்வாகம் எடுத்துள்ளது.

இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையாக ரூ.900 கோடியை அறிவிக்க வேண்டும் என, போட்டியாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் விளையாட்டின் மிகப் பழைமையான கிராண்ட்ஸ்லாம் போட்டியும், புல்தரை களத்தில் நடைபெறுவதுமான விம்பிள்டன், இந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.