தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் ‘டிரா’

News image

பிரக்ஞானந்தா

Updated On :18 மே 2026, 6:03 am IST

புசாரெஸ்ட் : சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா } ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

இந்திய நேரப்படி, சனிக்கிழமை நள்ளிரவில் நிறைவடைந்த இந்தச் சுற்றில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களம் கண்டார். கடந்த சில காலமாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கீமர், இந்த ஆட்டத்திலும் பிரக்ஞானந்தாவுக்கு சவால் அளித்தார்.

பிரக்ஞானந்தாவும் விட்டுக்கொடுக்காமல் விளையாட, ஆட்டத்தின் 64}ஆவது நகர்த்தலில் டிரா செய்துகொள்ள இருவரும் ஒப்புக் கொண்டனர். இதர ஆட்டங்களில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி } பிரான்ஸின் அலிரெஸô ஃபிரெüஸ்ஜாவை வெல்ல, ருமேனியாவின் போக்தன் டேனியல் } நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டிடம் தோல்வி கண்டார்.

பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் } உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவ், அமெரிக்காவின் வெஸ்லி சோ } சக அமெரிக்கரான ஃபாபியானோ கரானா ஆகியோர் மோதல் டிராவில் முடிந்தது. 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், களத்திலிருக்கும் 10 போட்டியாளர்களில் பிரக்ஞானந்தா உள்பட 5 பேர் தலா 2 புள்ளிகளுடன் இணை முன்னிலை வகிக்கின்றனர். கரானா, வெஸ்லி ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 2}ஆம் நிலையில் உள்ளனர்.

சிண்டாரோவ் 1 புள்ளியுடன் 3}ஆம் நிலையிலும், போக்தன், ஃபிரெüஸ்ஜா ஆகியோர் தலா 0.5 புள்ளிகளுடன் 4}ஆம் நிலையிலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.